Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் மின் திட்டத்தை செயல்படுத்துவோம்: பாமக நிறுவனர் ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் மின் திட்டத்தை  செயல்படுத்துவோம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

    By DIN  |   Published on : 27th March 2019 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ். 
    சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றுப் பேசியதாவது: 
    அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து நிற்பவர் இளைஞர்களை தூண்டிவிட்டு தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவரோடு இருந்த காலத்திலே அவர் எனக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். என்னை அழைக்கும் போதெல்லாம் தமிழ்குடிதாங்கி என்றுதான் அழைப்பார். அப்படிப்பட்டவர் நிலைமாறி என்னை எதிர்த்தார். ஏன் என்று கேட்டதற்கு உங்களை எதிர்த்தால் தான் நான் அரசியல் செய்ய முடியும் என்றார். இதுவா கொள்கை? 
    விருதாச்சலம் - கும்பகோணம், சிதம்பரம் - அரியலூர் ரயில் பாதை எனும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பாடுபடுவோம்.  மேலும் ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 
    நிகழ்ச்சியில் பாமக மாநில துணை பொது செயலாளர் வைத்தி, அதிமுக மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai