Enable Javscript for better performance
கீழப்பழூவூர் அருகே ரூ.1.98 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 770 பறிமுதல் செய்யப்பட்டன.
    துணை வட்டாட்சியர் ராஜாகோபால் தலைமையிலான பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு கீழப்பழுவூர் அடுத்த செட்டி நாடு சிமென்ட் ஆலை முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், கீழப்பழுவூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் பெரியபட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா(45) விற்பனைபணம் ரூ.1 லட்சத்து 98  ஆயிரத்து 770 உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து அவைகளை அரியலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai