Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    தொடர்ந்து மதுபானம் விற்றுக் கொண்டிருந்த கொலையனூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(36), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மேலனிக்குழியை சேர்ந்த வேல்முருகன்(48),   பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆதனக்குறிச்சியை சேர்ந்த கோபி(29)  ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சீனிவாசன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai