Enable Javscript for better performance
தா. பழூர் அருகே ரூ.1.26 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே புதன்கிழமை பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.1லட்சத்து 26 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டன.
    தேர்தல் நிலை அலுவலர் சி.காமராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் புதன்கிழமை தா.பழூர் அருகேயுள்ள வாழைக்குறிச்சி,சீனிவாசபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், கீழமைக்கேல் பட்டியைச் சேர்ந்த மதீயாஸ் மகன் அகஸ்டீன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 100 கொண்டு சென்றது தெரியவந்தது . இதையடுத்து அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai