Enable Javscript for better performance
மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
    இந்த விழாவையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திரண்ட பக்தர்கள் அங்கிருந்து தாம்பூழத்தில் பூக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு சாத்தினர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai