Enable Javscript for better performance
வேட்புமனு பரிசீலனை: சிதம்பரம் மக்களவை தொகுதி: 15 பேர் மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேட்புமனு பரிசீலனை: சிதம்பரம் மக்களவை தொகுதி: 15 பேர் மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 25 வேட்பு மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில், அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    அரியலூர் ஆட்சியரகத்தில், இவர்களின் மனுக்கள் சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தலைமையில், தேர்தல் பொது பார்வையாளரும், மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மேம்பாட்டு ஆணையருமான கே.ஹெச். குல்கர்னி முன்னிலையில் புதன்கிழமை பரிசீலனை நடைபெற்றது .
    இதில் 25 மனுக்களில் அதிமுக, அமமுக மற்றும் சுயேச்சைகள் தாக்கல் செய்திருந்த மாற்று வேட்பாளர்களின் 10  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், அமமுக வேட்பாளர் ஆ.இளவரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தி.ரவி மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (மார்ச் 28) திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சின்னம் ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மு.விஜயலட்சுமி தெரிவித்தார்.
    பரிசீலனையின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, அரியலூர் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தா.பரிதாபானு, தேர்தல் தனி வட்டாட்சியர் சந்திரசேகரன், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரதிநதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai