Enable Javscript for better performance
100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் 100  சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
          பேரணியை மகளிர் திட்ட அலுவலர் லலிதா தொடக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோர் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனர்.
    பேரணியானது திருமானூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தொடங்கி, பிரதான சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai