முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
By DIN | Published On : 15th May 2019 08:47 AM | Last Updated : 15th May 2019 08:47 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அந்தக் கூட்டமைப்பின் தலைவர் விருத்தகாசி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாணிக்கம், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த உறுப்பினர் லதா முருகேசனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அகவிலைப்படியை ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் ஊதியத்தை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்தினரை துணைத்தலைவர் பெரியசாமி வரவேற்றார். முடிவில் துணைச் செயலர் பழனிவேல் நன்றி தெரிவித்தார்.