முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
திருமானூர் அருகே சாலையில் முறிந்து விழுந்த ஆலமரம்
By DIN | Published On : 15th May 2019 08:48 AM | Last Updated : 15th May 2019 08:48 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி சாலையோரத்திலுள்ள மிகவும் பழமையான ஆலமரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி புறவழிச்சாலையிலுள்ள ஆண்டவர் கோயிலின் தென்புறம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. கோயிலுக்கு வருபவர்களுக்கு நிழலாகவும் , கோயில் மரமாகவும் போற்றப்பட்டு வந்தது. வனத்துறைக்குச் சொந்தமான இந்த பழமைவாய்ந்த ஆலமரத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் திடீரென முறிந்து சாலையின் நடுவில் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக மரத்தின் கீழ் யாரும் நிற்கவில்லை. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.