முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் காதல் ஜோடி தஞ்சம்
By DIN | Published On : 18th May 2019 09:21 AM | Last Updated : 18th May 2019 09:21 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனர்.
வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் அஜித்குமார்(22), கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை மகள் ரேணு(21). இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்து தலைமறைவான இவர்கள் ஒக்கநத்தம் பாப்பாத்தியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்த அஜித்குமார், ரேணு ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.