முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மதுபானம் கடத்தி வந்தவர் கைது
By DIN | Published On : 18th May 2019 09:22 AM | Last Updated : 18th May 2019 09:22 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் கடத்தி வந்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை உடையவர்தீயனூர் பிரிவுசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் கொலையனூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன்(23) என்பவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து, தேவேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.