செந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி வேன் மோதி ஒருவர் சாவு
By DIN | Published On : 18th May 2019 09:20 AM | Last Updated : 18th May 2019 09:20 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
செந்துறை அருகேயுள்ள ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(40). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் ராயம்புரம் கிராமத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார்.
செந்துறை சாலையில் செல்லும் போது எதிரே வந்த ஆம்னி வேன், இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில், பாண்டியன் உயிரிழந்தார். இதனையடுத்து, அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.