சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள புனித அந்தோணியார் தேவாலய தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
  கடந்த 15ஆம் தேதி மாலை 5 மணியளவில் திருமானூர் பங்கு தந்தை பெல்லார்மின் தலைமையில், விளாங்குடி இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப்ராஜ், கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலியும் நடைபெற்றது.
  தொடர்ந்து 16, 17 ஆகிய தேதிகளில் கிராம மக்கள் சார்பில் இதழ்கள் திருப்பலி நடத்தப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான  தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. 
  முன்னதாக, புனித வனத்து சின்னப்பர் கல்லறையை புனிதப்படுத்துதல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 
  தொடர்ந்து மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேரில் புனித அந்தோணியார் மற்றும் சகாய மாதா எழுந்தருளி தேர் புனிதப்படுத்தப்பட்டு, கிளாரினெட் இன்னிசை மற்றும் வாணவேடிக்கையுடன் புறப்பாடு நடைபெற்றது.
   அலங்கார தேர்பவனி காரைப்பாக்கம் மற்றும் மஞ்சமேடு ஆகிய கிராமங்களில் முக்கிய வீதிகளின் வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித அந்தோணியார் மீது மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வணங்கினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai