சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சியான சூழல் நிலவி  வருகிறது. ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆழதுளை கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள நீரை கொண்டு பயிர் சாகுபடி  செய்யும் விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் மற்றும்  மழைத்தூவான் அமைத்து சாகுபடி மேற்கொண்டால் தண்ணீரை சேமிப்பதுடன் மகசூலையும் அதிகரித்து லாபம்  அடையலாம்.
 நுண்ணீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.  எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனைடைய தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு  கொள்ளலாம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com