படம் இணைப்பு உண்டு..வாரணவாசி ஊராட்சியில் டெங்கு தடுப்புப்பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், வாரணவாசி ஊராட்சியில் சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்று வரும் டெங்கு முன்னெச்சரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் டெங்குத் தடுப்புப் பணிகளைத் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.
வாரணவாசி ஊராட்சியில் டெங்குத் தடுப்புப் பணிகளைத் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் மாவட்டம், வாரணவாசி ஊராட்சியில் சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்று வரும் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாரணவாசி ஊராட்சி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் த.ரத்னா பொதுமக்களிடம் கூறியது:

பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். தெரு மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் என யாருக்கேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். மருத்துவரை அணுகாமல் மாத்திரை உள்கொள்ளக் கூடாது என்றாா்.

ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சி.ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com