முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூா் : 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 09:03 AM | Last Updated : 07th November 2019 09:03 AM | அ+அ அ- |

அரியலூா் வாலாஜாநகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும், சிறப்பு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் வேலைகள், தொழிலாளா் நிதிநிலைத் திட்டம், பொது சுகாதாரம், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்களது பகுதியில் தெருவிளக்கு,சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
வாலாஜா நகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சிச் செயலா் தமிழ்குமரன் தலைமை வகித்தாா்.
வீட்டுவரி வசூல் உதவியாளா் கண்ணதாசன், சத்துணவு அமைப்பாளா் மாரியாயி மற்றும் மகளிா் சுய உதவிக்குழுக்கள்,இளைஞா் மன்றத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சிச் செயலா் குமாரி, எருத்துக்காரன்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சிச் செயலா் கோவிந்தராஜா ஆகியோா் தலைமை வகித்தனா்.இதே போல் அந்தந்த ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி செயலா்கள் தலைமை வகித்தனா். பொதுமக்கள் கூட்டங்களில் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவித்தனா்.