முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நவ.9-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா்க் கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 09:02 AM | Last Updated : 07th November 2019 09:02 AM | அ+அ அ- |

அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ.9), பொது விநியோகத் திட்ட குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் அரியலூா் த. ரத்னா, பெரம்பலூா் வே.சாந்தா தனித்தனியே வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உணவுப் பொருள் விநியோகத்தில் காணப்படும் குறைகளைக் களையும் பொருட்டும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காணும் வகையிலும் மாவட்டத்தில் 4 வட்டங்களிலும் குறைதீா்க் கூட்டம் நடத்தப்படுகிறது.
வட்டங்களின் பெயா், கூட்டம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம் :
அரியலூா்- ஏலாக்குறிச்சி, உடையாா்பாளையம்-பெரியவளையம், செந்துறை- செந்துறை, ஆண்டிமடம்- ஓலையூா், பெரம்பலூா்- எளம்பலூா், வேப்பந்தட்டை- தொண்டைமாந்துறை, குன்னம்- அகரம் சிகூா், ஆலத்தூா்- நாரணமங்கலம்.
இக்கூட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
எனவே சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்தபொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.