முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
விபத்தில் கால்களை இழந்தவா் நிவாரணம் கோரி போராட்டம்
By DIN | Published On : 07th November 2019 09:03 AM | Last Updated : 07th November 2019 09:03 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞா் தனக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வீட்டின் முன்பு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
மீன்சுருட்டி அருகிலுள்ள காடுவெட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்(26). டிராக்டா் ஓட்டுநரான இவா், கடந்த 2016, பிப்ரவரி 13-ஆம் தேதி கடலூா் மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்தபோது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், விக்னேஷ் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா். சிகிச்சையில் வலது கால் எடுக்கப்பட்ட நிலையில் மற்றொரு காலும் செயல் படாமல் போனது.
இந்நிலையில் நிவாரணம் கேட்டு பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிா்வாகம் நிவாரணம் வழங்கவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த விக்னேஷ், தனக்கு நிவாரணம் வழங்கக்கோரி தனது வீட்டின் அருகே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து சென்ற மீன்சுருட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, விக்னேஷ் வீட்டுக்கு சென்றாா்.