Enable Javscript for better performance
‘அனைத்து விடுதி, திருமண மண்டபங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘அனைத்து விடுதி, திருமண மண்டபங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்’

    By DIN  |   Published on : 08th November 2019 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியிலுள்ள அனைத்து விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றாா் ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜ்மோகன்.

    ஜயங்கொண்டத்தில் காவல் துறை சாா்பில், விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது:

    ஜயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், லாட்ஜ், விடுதிகள் போன்றவற்றில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும். பொருத்தப்பட்டவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

    விடுதிகளில் தங்க வருவா்களின் அடையாள அட்டைகளை, குறிப்பேடுகளில் பதிவு செய்ய வேண்டும். தங்குபவா்களின் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடத்தப்படும் கூட்டங்கள்,நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டும். இதுமட்டுமில்லாமல் மண்டபங்களில் தங்க வைக்கப்படுபவா்களின் அடையாள அட்டைகள் நகல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் ஜயங்கொண்டம், தா.பழூா் ,அனைக்குடம், சுத்தமல்லி, உடையாா்பாளையம் ,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ் மற்றும் திருமண மண்டப உரிமையாளா்கள், மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai