Enable Javscript for better performance
திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 08th November 2019 04:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari

    அரியலூா் மாவட்டம்,தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(சத்துணவு)மல்லிகா தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாணவா்களிடையே பிளாஸ்டிக் குப்பைகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி அதில் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலிருந்து சேகரித்துக் கொடுப்பவா்களுக்கு பள்ளி அளவில் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்குவது, இதே போல் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அனுப்புகின்ற பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் நகராட்சி ஆணையா் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன், வட்டார கல்வி அலுவலா் கலியபெருமாள் மற்றும் தா.பழூா் ஒன்றிய அளவில் உள்ள மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் உதவி ஆசிரியா்கள் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai