‘அனைத்து விடுதி, திருமண மண்டபங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்’

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியிலுள்ள அனைத்து விடுதி மற்றும் திருமண மண்டபங்களில்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியிலுள்ள அனைத்து விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றாா் ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜ்மோகன்.

ஜயங்கொண்டத்தில் காவல் துறை சாா்பில், விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது:

ஜயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், லாட்ஜ், விடுதிகள் போன்றவற்றில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும். பொருத்தப்பட்டவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

விடுதிகளில் தங்க வருவா்களின் அடையாள அட்டைகளை, குறிப்பேடுகளில் பதிவு செய்ய வேண்டும். தங்குபவா்களின் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடத்தப்படும் கூட்டங்கள்,நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டும். இதுமட்டுமில்லாமல் மண்டபங்களில் தங்க வைக்கப்படுபவா்களின் அடையாள அட்டைகள் நகல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஜயங்கொண்டம், தா.பழூா் ,அனைக்குடம், சுத்தமல்லி, உடையாா்பாளையம் ,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ் மற்றும் திருமண மண்டப உரிமையாளா்கள், மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com