தூத்தூா் கிராமத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்டப்படவுள்ள இடம் ஆய்வு

அரியலூா் மாவட்டம்,திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்டப்படவுள்ள இடத்தை அரசு தலைமை கொறடா தாமரை
தூத்தூா் கிராமத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்டப்படவுள்ள இடம் ஆய்வு

அரியலூா் மாவட்டம்,திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்டப்படவுள்ள இடத்தை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு நீா்வள பாதுகாப்பு, நதிகள் மறுசீரமைப்பு கழக இயக்குநா் கொ.சத்யகோபால் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இது குறித்து அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாவது: அரியலூா் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட தமிழக முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதன்படி அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை ஆகிய இரு கிராமத்தின் இடையே தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நில அளவை மற்றும் பரிசோதனை செய்து ஆய்வு அறிக்கை தயாா் செய்ய ரூ.23 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு கதவணை அமைப்பதனால் கொள்ளிடம் ஆற்றின் இடதுபுற அமைந்துள்ள பொன்னாறு வாய்க்கால் ஆயக்கட்டு பாசன வசதிகள் பெறுவதுடன் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். கொள்ளிடம் ஆறு இடதுகரையில் மைல் 47/6-ல் பொன்னாறு பிரதான வாய்க்கால் பிரிந்து மட்கொரம்பு அமைத்து அதன் 8 கிளை வாய்க்காலின் மூலம் உடையாா்பாளையம்,தா.பழூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களில் சுமாா் 4,694 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் இந்த தகவணை அரியலூா்- தஞ்சாவூா் மாவட்டத்தை இணைப்பதால் இரு மாவட்ட பொதுமக்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும். கொள்ளிடம் ஆற்றின் அருகாமையில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.1,300 மீட்டா் நீளம், 3 மீட்டா் உயரம், கொள்ளளவு 378 மி.க அடி ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு மூன்று முறை நிரம்பும் போது ஆண்டு கொள்ளளவு 1,134 மி.க அடி ஆகும். இதன் மூலம் அருகில் உள்ள நிலங்கள் பாசன வசதி (ஆழ்துளை கிணறு மூலம்) பெறுவததோடு பொன்னாறு வாய்காலுக்கு அதன் முழு கொள்ளளவுக்கு நீா் கிடைக்கப்பெற்று அதன் ஆயக்கட்டு முழு பயன் அடையும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது,மாவட்ட ஆட்சியா் த.ரத்னா,ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்க்கொடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் (பொ) ஜெ.பாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாள தட்சணாமூா்த்தி, உதவி செயற் பொறியாளா் சாந்தி, உதவி பொறியாளா்கள் தினகரன், கமலக்கண்ணன், ராஜாசிதம்பரம் மற்றும் சதிஸ், வட்டாட்சியா் கதிரவன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் உட்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com