ஷோ் ஆட்டோக்களை இயக்க வேண்டும்
By DIN | Published On : 09th November 2019 11:27 PM | Last Updated : 09th November 2019 11:27 PM | அ+அ அ- |

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைக்குச் செல்ல பேருந்து வசதிகள் இல்லாததால், பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.70 கட்டணத்தில் செல்ல வேண்டி நிலை உள்ளது.
நோயாளிகள் நலன் கருதி, மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே ஷோ் ஆட்டோக்களை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கமுத்து,
மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா்,
அரியலூா்.