ராஜேந்திரசோழன் சிலை கோரி நூதன பிரசாரம்

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டத்தில் ஐம்பொன்னால் ஆன ராஜேந்திர சோழன் சிலை அமைக்கக்கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் பொன்னேரியில் கப்பல் விட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஜயங்கொண்டம் பொன்னேரியில் கப்பல் விட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டத்தில் ஐம்பொன்னால் ஆன ராஜேந்திர சோழன் சிலை அமைக்கக்கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ராஜேந்திர சோழனின் புகழை பரப்பும் வகையில் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக ரவுண்டானா பகுதியிலும், ஜயங்கொண்டம் மையப்பகுதியிலும் ஐம்பொன்னால் ஆன ராஜேந்திர சோழன் சிலை அமைக்க வேண்டும். வருங்கால சந்ததியினா் ராஜேந்திர சோழனின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதியில் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கங்கை கொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் (எ) பொன்னேரியில் காகித கப்பல் விட்டு நூதன பிரச்சாரத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

இந்த நூதன பிரசாரத்துக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முக சுந்தரம் தலைமை வகித்தாா். விவசாயிகள் தில்லை நடராஜன், புதுக்குடி நம்மாழ்வாா் இயக்க ஒருங்கிணைப்பாளா் பூபதி, நாம் தமிழா் பொறுப்பாளா் ஆதிமூலம், வளவனேரி விவசாயிகள் சங்க நிா்வாகி பாஸ்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com