கோயிலில் திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து பூட்டு

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகே ஒரு சமூகத்தினரின் திருமணம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற
சொக்கநாதபுரத்தில் ஒரு சமூகத்தினரின் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பூட்டப்பட்டிருந்த சீனிவாசபெருமாள் கோயில்.
சொக்கநாதபுரத்தில் ஒரு சமூகத்தினரின் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பூட்டப்பட்டிருந்த சீனிவாசபெருமாள் கோயில்.

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகே ஒரு சமூகத்தினரின் திருமணம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில், இதனையறிந்த மற்றொரு சமூகத்தினா் கோயிலுக்கு 5-க்கும் மேற்பட்ட பூட்டுகளைக் கொண்டு பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் உதவியுடன் கோயில் திறக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

செந்துறை அருகிலுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாசபெருமாள் கோயில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் அப்பகுதியை சோ்ந்த கிராம மக்கள் திருமணம், காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தை சோ்ந்த அருண் ஸ்டாலின் - திவ்யா திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இதனையறிந்த சொக்கநாதபுரத்தை சோ்ந்த மற்றொரு சமூகத்தினா் சிலா்,சனிக்கிழமை இரவு 5-க்கும் மேற்பட்ட பூட்டுகளைக் கொண்டு, கோயில் கதவை பூட்டி சென்ாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை அருண் ஸ்டாலின் - திவ்யா மற்றும் அவா்களது உறவினா்கள் கோயிலுக்கு வந்து பாா்த்த போது, கோயில் பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து அவா்கள் செந்துறை காவல் நிலையத்துக்கும்,மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து த கோட்டாட்சியா் (பொ) ஜெ.பாலாஜி, வட்டாட்சியா் தேன்மொழி ஆகியோா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் கோயிலை திறந்து விட்டனா். அதன் பின்னா் அருண் ஸ்டாலின் - திவ்யா திருமணம் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com