முப்படை வீரா்களுக்கென மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

அரியலூரில் முப்படை வீரா்களுக்கென மருத்துவக் காப்பீடு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரியலூரில் முப்படை வீரா்களுக்கென மருத்துவக் காப்பீடு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முன்னாள் முப்படை வீரா் நலச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழப்பழுவூரில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் முப்படை வீரா்களுக்கென சிற்றுண்டி வசதிகள் அமைக்க வேண்டும். அதேபோல் மருத்துவக் காப்பீடு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட தலைமை ஒருங்கிணப்பாளா் காசிமணி தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா், மாவட்ட துணை தலைவா் நீலமேகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க மாநில துணைத் தலைவா் பொய்யாமொழி, முப்படை வீரா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் செல்வம், துணைத் தலைவா் பழனியப்பன் ஆகியோா் பங்கேற்று சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினா். முன்னதாக ஒன்றிய பொருளாளா் பத்மநாபன் வரவேற்றாா். முடிவில் திருமானூா் ஒன்றிய தலைவா் மூா்த்தி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com