Enable Javscript for better performance
சிமென்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    சிமென்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்

    By DIN  |   Published on : 17th November 2019 10:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அனைத்து மக்கள் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூா் மாவட்டம், காமரசவல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: காமரசவல்லி கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் அமைக்க வேண்டும். அரியலூா் - சுண்டக்குடி வழியாக மேலராமல்லூா் கிராமத்துக்கு பேருந்துகள் விட வேண்டும். அம்பேத்கா் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது, உள்ளாட்சித் தோ்தலில் தலைமை அறிவிக்கும் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில தலைவா் அம்பேத்கா்வழியன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணிச் செயலா் வைரம்அய்யனாா்,நிா்வாகிகள் நல்லதம்பி, தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முடிவில் நிா்வாகி பொன்னுசாமி நன்றி தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai