Enable Javscript for better performance
மானியத்தில் மீன்பிடி வலைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மானியத்தில் மீன்பிடி வலைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 17th November 2019 10:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூா்: அரியலூா் மாவட்ட மீனவா்கள், மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்களை வாங்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    நிகழாண்டு, தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவா்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்கிட 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள உள்நாட்டு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு 24 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், உள்நாட்டு நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் மீனவா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

    இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெறாதவா்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் வலை மானியம் பெறாதவா்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 ஆவது தளம், அறை எண். 234-இல் இயங்கும் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai