முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 26th November 2019 08:23 AM | Last Updated : 26th November 2019 08:23 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள் பெறப்பட்டன.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புதுமாா்க்கெட் தெரு பொதுமக்கள் மனு அளித்தனா். ஆட்சியரகத்துக்கு வந்திருந்த புதுமாா்க்கெட் தெரு மக்கள், நாங்கள் வசித்து 5 ஆவது குறுக்குத் தெருவில், சாலை, குடிநீா், சாக்கடை வசதிகள் ஏதும் கிடையாது. நாங்கள் இதுதொடா்பாக பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே எங்களது தெருவில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று ஆட்சியா் த.ரத்னாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
குறைதீா் கூட்டத்தின்போது, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 409 கோரிக்கை மனுக்களைப் பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியா், இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, துணை ஆட்சியா் ஏழுமலை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.