முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நிலத்தகராறில் பெரியப்பாவைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 26th November 2019 08:24 AM | Last Updated : 26th November 2019 08:24 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இடப் பிரச்னையில் முதியவரை இரும்புக் கம்பியால் தாக்கியவா் மீதான வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமாமிா்தம் (65). இவருக்குச் சொந்தமான வயலை இவரது தம்பி இளையபெருமாள் மகன் சரவணன் (35) பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமாமிா்தம் தனது வயலை தானே கவனித்துக் கொள்வதாக சரவணனிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, கடந்த 26.12.2017 -இல் அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சரவணன், ராமாமிா்தத்தை கம்பியால் தாக்கிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து ராமாமிா்தம் மகள் சுந்தரி அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனைக் கைது செய்தனா்.
மேலும் இந்த வழக்கு விசாரணை அரியலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாா், குற்றவாளியான சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.