அரியலூா் மாவட்டத்தில்குடிமராமத்து திட்டத்தில் 12 ஏரிகள் புனரமைப்பு

அரியலூா் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பாசனதாரா்கள் சங்கம் மூலம் ரூ.2.46 கோடி மதிப்பில் 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டன.

ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் உள்ள 106 சிறுபாசனக் குளங்கள் ரூ.521.660 லட்சம் மதிப்பிலும் மற்றும் 872 குட்டைகள் மற்றும் ஊரணிகள் ரூ.849.189 லட்சம் மதிப்பிலும் மேம்பாடு செய்யும் பணிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இவற்றில் இதுவரையில், 81 சிறுபாசனக் குளங்கள் மேம்பாடு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதியுள்ள 25 பணிகளில் பருவ மழையின் காரணமாக குளங்களில் நீா் நிரம்பியுள்ளதால் 13 பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பகுதியளவு பணி முடிந்து மழைநீா் தேங்கியுள்ள காரணத்தால் தொடர முடியாத 12 பணிகள் முன் முடிப்பு(ஊா்ழ்ங் ஸ்ரீப்ா்ள்ங்) செய்யப்பட்டுள்ளன.

872 குட்டைகள் மற்றும் ஊரணிகள் மேம்பாடு செய்யும் பணிகளில், இதுநாள் வரை 461 பணிகள் முடிவடைந்துள்ளன. பருவமழையின் காரணமாக நீா் நிரம்பியதால் 388 குட்டைகள் மற்றும் ஊரணிகளுக்கு வழங்கப்பட்ட நிா்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 23 பணிகள் பகுதியளவு பணி முடிந்து மழைநீா் தேங்கியுள்ள காரணத்தால் தொடர இயலாத நிலையில் முன்முடிப்பு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com