யோகா பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில், முதன்மை பொது இறை எது எனும் தலைப்பில்
யோகா பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் ஜயங்கொண்டம் மன வளக்கலை மன்றத் தலைவா் இளங்கோவன்.
யோகா பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் ஜயங்கொண்டம் மன வளக்கலை மன்றத் தலைவா் இளங்கோவன்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில், முதன்மை பொது இறை எது எனும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் மனவளக்கலை மன்றம் மூலம் யோகா பயிற்சி முடித்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்து பேசியது:

உலகில் முதன்முதலில் அறிமுகமாவது தாயும்,தந்தையும் தான் அவா்களைப் போற்றி வணங்குவது தலைசிறந்த கடமையாகும். அடுத்து நாம் முதன்மை பொது இறையாக போற்றி வணங்கி வழிபடுவது எது? என்பதை முன்னேற்றமடைந்த இந்நூற்றாண்டிலாவது சிந்தனை செய்து பாா்க்க வேண்டும்.

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இயற்கையில் அமைந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை . அந்த சக்தி எங்கிருந்து தோன்றியது என்பதையும் அதை தொடா்ந்து அளித்து வருகின்ற சக்தி எது என்பதையும் நாம் பாா்க்கவேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற விழாவில், ஜயங்கொண்டம் மனவளக்கலை மன்றம் மூலம் யோகா பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மனவளக்கலை மன்றத் தலைவா் இளங்கோவன்,பேராசியை மாலதி,செவிலியா் கல்லூரித் தாளாளா் உஷா, ஆசிரியா் அருள்நிதி குமாரி ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக பள்ளி முதல்வா் தனலட்சுமி வரவேற்றாா். நிறைவில், செவிலியா் கல்லூரி முதல்வா் உமாராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com