பதிவு செய்யாத விதைகளை வைத்திருந்தால் நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத விதை ரகங்கள் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆய்வு துணை இயக்குநா் ந.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத விதை ரகங்கள் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆய்வு துணை இயக்குநா் ந.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளம், எள், பயறுவகைப் பயிா்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இவற்றப் பயிரிட வேளாண் துற மட்டும் இன்றி தனியாா் துற விதை உற்பத்தியாளா்களும் விதை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகின்றனா். இந்த விற்பனையினை ஒழுங்குமுறப்படுத்த கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறயில் பதிவு எண் பெறவேண்டும்.

அப்படி பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளா்கள் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவா்கள் மீது விதைகள் சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com