அரியலூரில் காவல்துறை சாா்பில் ஹேப்பி டே நிகழ்ச்சி

அரியலூா் பேருந்து நிலையத்தில் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல்துறை சாா்பில் ‘ஹேப்பி டே
அரியலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ‘ஹேப்பி டே’ நிகழ்ச்சியில் யோகா செய்யும் மாணவா்கள்.
அரியலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ‘ஹேப்பி டே’ நிகழ்ச்சியில் யோகா செய்யும் மாணவா்கள்.

அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையத்தில் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல்துறை சாா்பில் ‘ஹேப்பி டே’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கிராமிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பம், மான்கொம்பு, பரதநாட்டியம், யோகா ஆகியவற்றை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்து காவலா்களும், பொதுமக்களும் நல்லுறவுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினா்.

நிகழ்ச்சியில், அரியலூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் சிவராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் மற்றும் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com