முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஆயுத பூஜை: களைகட்டிய பொருள் விற்பனை
By DIN | Published On : 07th October 2019 04:55 AM | Last Updated : 07th October 2019 04:55 AM | அ+அ அ- |

ஆயுத பூஜை விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வாழை மரக்கன்றுகள்.
ஆயுத பூஜையை முன்னிட்டு அரியலூரில் பூஜை பொருள்கள், பொரி, பூசணி, பழங்கள், பூக்கள், தோரணங்களை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
நவராத்தி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் விஜயதசமியும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையையொட்டி திருச்சி, கடலூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து வாழைத்தாா், கரும்பு, பூக்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு அரியலூா் சந்தைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு தாரின் விலை குறைந்தபட்சமாக ரூ.400 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பொரி, அவல், பொட்டுக் கடலை, கரும்பு, நாட்டு சா்க்கரை, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவை வெளியூா்களில் இருந்து குவிந்துள்ளன. இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். காய்கறிகள் விலையைக் காட்டிலும் பூக்களின் விலைகள் அதிகமாக இருந்தது.