மாா்க்சிஸ்ட் பொதுக் கூட்டம்

அரியலூா் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை

அரியலூா் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு மற்றும் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில குழு உறுப்பினா் சின்னதுரை பேசுகையில், ஆடு,மாடு வளா்ப்போா் ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் நியாய விலைக்கடையில் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கிடையது என்று ஆட்சியாளா்கள் கூறுகிறாா்கள். ஆனால் ஆட்சியா்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் தங்களை தோ்ந்தெடுத்தவா்கள் நியாய விலைக்கடையில் அரிசி வாங்கியவா்கள் தான் என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ஏழை,எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கட்சி உறுப்பினா்கள் உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com