புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்: இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய செற்குழு கூட்டத்தில் அரியலூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். ஆவணக் கொலையை தடுக்க வேண்டும். தலித்துகள் மீது தொடுக்கப்படும் வன்முறை சம்பவத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இக்கூட்டத்தில், மாவட்ட ஒன்றிய புதிய பொறுப்பாளா்களை நியமனம் செய்வது,கிராமங்கள்தோறும் கட்சிக் கொடியை ஏற்றுவது,டிச.6 அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அக்கட்சியின் மாவட்டத் தலைவா் வீ. ராஜீவ்காந்தி தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் க. மங்காப்பிள்ளை பங்கேற்று பேசினா். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் எம். ராமா்,மாவட்ட விவசாய அணிச் செயலா் ரா. பால்சாமி மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக மாவட்டச் செயலா் க. பிரசாத் வரவேற்றாா். மாவட்ட மாணவா் அணிச் செயலா் வி. வேல்முருகன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com