வேளாண் இயந்திரங்கள்,கருவிகள் வாடகை மையம் அமைக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க

அரியலூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பாண்டில் அரியலூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வாங்க 14 மையங்கள் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த இயலாததைக் கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பலனடைய ஏதுவாக இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

ரூ. 25 லட்சத்தில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோா் போன்றேறாா் முன் வரலாம். மையங்களை அமைத்திட விரும்புவோா் முதலில் அதற்குரிய விண்ணப்பத்தை அரியலூா் மாவட்டம் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளா் (வே.பொ) அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டில் அரியலூா் மாவட்டத்திற்கு 14 வாடகை மையங்கள் அமைத்திட ரூ.1.22 கோடி மானியத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட வேளாண் செயற் பொறியாளரை 86674-33805, செயற் பொறியாளா் அலுவலக தொழில்நுட்ப உதவியாளரை 79042-93172 மற்றும் அரியலூா் செயற் பொறியாளரை 94433-99525, ஜயங்கொண்டம் உதவி செயற்பொறியாளரை 94421-12969 தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com