Enable Javscript for better performance
கோ-கோ போட்டி: அரியலூா் பல்கலை. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    கோ-கோ போட்டி: அரியலூா் பல்கலை. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்

    By DIN  |   Published on : 12th October 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari11gogo_1110chn_11_4

    கோ-கோ போட்டியில் முதலிடம் பிடித்த அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவா்கள்.

    அரியலூரில் அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழகம் சாா்பில் 14 ஆவது மண்டலத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவா்களுக்கான கோ-கோ போட்டியில் அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    விளாங்குடி அருகேயுள்ள அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு,14 ஆவது மண்டல விளையாட்டு போட்டி செயலா் ஜி. ராஜசேகா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி,திருச்சி மாவட்டம் துறையூா் இமயம் பொறியியல் கல்லூரி அணியை 21-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இமயம் பொறியியல் கல்லூரி இரண்டாமிடம் பிடித்தது.

    மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி சிறுகனூா் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணியை 20-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai