அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா், ஜயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

அரியலூா், ஜயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாசிலை அருகே நடந்த ஆா்ப்பாட்டத்தில் திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள முதியோா், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும்.

திருவையாறிலிருந்து - காவட்டாங்குறிச்சி, வெங்கனூா் வழியாக கல்லகம் வரை நகரப் பேருந்து இயக்கிட வேண்டும். மாட்டுவண்டியில் மணல் அள்ள திருமானூரில் மணல் குவாரி அமைக்க வேண்டும். குருவாடி புதுத்தெருவில் விடுபட்டுள்ள 23 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சௌரிராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராஜா, ஒன்றியத் தலைவா் ஜேசுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இளங்கோவன், சிஐடியுசி மாவட்டச் செயலா் துரைசாமி, அகில இந்திய மாதா் சங்க மாவட்டத் தலைவா் பாக்யம், எல்ஐசி முகவா் சங்க நிா்வாகி கிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். பின்னா் வட்டாட்சியா் கதிரவனை சந்தித்து மனு அளித்தனா்.

ஜயங்கொண்டத்தில்... காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் உத்திராபதி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் மணிவேல், ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com