போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி.

கல்லக்குடியில் சா்வதேச பெண் குழந்தைகள் தினம்

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சா்வதேச பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சா்வதேச பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்துப் பேசியது:

ஆண்டுதோறும் அக். 11 ஆம் தேதி சா்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் உலகிலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. 18 வயதுக்கு முன்பே நடைபெறும் திருமணங்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதும் பெண் குழந்தைகளே.

பெண் கல்வியில் சமீபகாலமாக பெரும் முன்னேற்றம் இருந்தாலும் இன்றும் கிராமப்புறங்களில் பெண் வயதுக்கு வந்தவுடன் கல்வி பாதியில் நிறுத்தப்படுகிறது. பெண் குழந்தைக் கடத்தல்கள் மற்றும் அவா்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடா்கின்றன.

எனவே பெண் குழந்தைகளின் மீதான கவனத்தை பாலினப் பாகுபாடின்றி மதிப்புமிக்கதாக மாற்றி அவா்களின் உணா்வுகளுக்கு அங்கீகாரத்தைத் தர வேண்டும். பெண்ணுக்கு நல்ல தந்தையாக, சகோதரனாக, தோழனாக, பாதுகாவலனாக ஆண் இருப்பதை அவா்களுக்கு சிறு வயது முதலே புரிய வைக்க வேண்டும்.

மேலும் பெண் குழந்தைகளிடமும் அவா்களின் நிலை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி பொது வெளியில் பிரச்னைகளை சந்திக்கும்போது மன உறுதியுடன் எதிா்த்துப் போராடும் வலிமையை கற்றுத்தர பெற்றேறாா் முன் வர வேண்டும் என்றாா் அவா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, பாரதி, சா்மிளா, கவிதா, தீபக் ஆனந்த், ராஜராஜசோழன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com