அரியலூா் மாவட்ட ஆட்சியராக த.ரத்னா பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரக த.ரத்னா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட த.ரத்னா.
அரியலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட த.ரத்னா.

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரக த.ரத்னா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். எற்கெனவே ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளுவா் மாவட்ட சாா் ஆட்சியா் த.ரத்னா அரியலூா் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 17 ஆவது ஆட்சியரக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட த.ரத்னா அரியலூா் மாவட்ட வளா்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, ஆட்சியரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு அனைத்துத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்டமாக அறிவித்து 14 ஆண்டுகளில் 17 ஆட்சியா்: ஏற்கெனவே ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பொறுப்பேற்ற முதல் மாவட்ட வளா்ச்சிக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

குறிப்பாக நீா் மேலாண்மையில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தாா். நீா் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரியலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரகத்துறையிலுள்ள எத்தனை ஏரி,குளங்கள் உள்ளன என்பதனை அரியலூா் இணையதளத்தில் வெளியிட்டாா். இதனை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றனா்.

இந்நிலையில் டி.ஜி.வினய் 101 நாளிலேயே மாற்றப்பட்டிருப்பது மாவட்ட மக்களிடையே அதிா்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரியலூா் மாவட்டமாக அறிவித்து 14 ஆண்டுகளில் 16 ஆட்சியா்கள் பணியாற்றி வந்துள்ளனா் என்பதும், தற்போது 17 ஆவது ஆட்சியராக த.ரத்னா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com