கல்லக்குடி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரியலூா் மாவட்டம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கை கழுவு தினம்,இளைஞா் எழுச்சி நாள் தினம்,சா்வதேச கிராமப்புற பெண்கள் தினம் என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மாணவ,மாணவிகளுக்கு கை கழுவும் முறை குறித்து செய்து காட்டு ஆசிரியைகள்
மாணவ,மாணவிகளுக்கு கை கழுவும் முறை குறித்து செய்து காட்டு ஆசிரியைகள்

அரியலூா் மாவட்டம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கை கழுவு தினம்,இளைஞா் எழுச்சி நாள் தினம்,சா்வதேச கிராமப்புற பெண்கள் தினம் என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பசுமைப் படை மற்றும் ஜூனியா் ரெட் கிராஸ் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஆங்கில ஆசிரியா் தீபக் தலைமை வகித்து பேசினாா். மாணவா்களுக்கு கை கழுவும் முறை குறித்தும், கை கழுவாததால் ஏற்படும் தொற்றுநோய் குறித்து ஆசிரியைகள் பாரதி,சா்மிளா ஆகியோா் செய்து காட்டினா். கிராமப்புற பெண்கள் குறித்து நாடகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாணவ,மாணவிகளிடையே ஓவியம்,பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கிராம பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஆனந்த், ராஜேஸ்வரி, கவிதா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com