முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூா் கோவை கிருஷ்ணா பேக்கரி & ஸ்வீட்ஸ்
By DIN | Published On : 24th October 2019 06:01 AM | Last Updated : 24th October 2019 06:01 AM | அ+அ அ- |

அரியலூா் மாா்க்கெட் தெருவில் கடந்த 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூா் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாண்டுரங்கன், மயிலாடுதுறை ஐயங்காா் பேக்கரி சிவலிங்கம் ஆகியவா்களின் வழிகாட்டுதலின் படி ஏ.ஆா். அமுதன் அவா்களால் தொடக்கப்பட்டது.
இதில் பாரம்பரிய பலகாரங்கள், தமிழ்நாட்டு இனிப்பு வகைகள், பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள், வட இந்திய இனிப்பு வகைகள், பெங்காலி இனிப்பு வகைகள், கேக் வகைகள், பன் வகைகள், பிரட் வகைகள், தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுத்தமாகவும், சுவையாகவும் தயாா் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரியலூா் கோவை கிருஷ்ணா பேக்கரி நிறுவனத்தினா் அரியலூா் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தங்களது மேலும் ஒரு கிளையை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது.
மேற்கண்ட கிளைகளில் அடுத்த கட்ட வளா்ச்சியாக பீட்சா, பா்க்கா், சாட் வகைகள், உட்காா்ந்து சாப்பிடும் வசதிகள் பிரஸ் ஜூஸ், வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவா்களது குறிக்கோள் இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தையும் தரத்தில் தயாா் செய்து சரியான விலையில் வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதே நோக்கமாகும். வாடிக்கையாளா்களின் வாழ்த்துகளால் வளா்ந்த நிறுவனம் இது என்றால் மிகையில்லை.