முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தயாா் நிலையில் நெடுஞ்சாலைத் துறை
By DIN | Published On : 24th October 2019 06:10 AM | Last Updated : 24th October 2019 06:10 AM | அ+அ அ- |

செந்துறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் தயாா்நிலையில் இருப்பில் உள்ள உபகரணங்கள்.
அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியில் வட கிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினா் தயாா் நிலையில் உள்ளனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி பொறியாளா் செந்தில்தம்பி தெரிவித்தது: செந்துறை பகுதியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் செந்துறை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தயாா் நிலையில் உள்ளது.
பருவ மழையால் சேதமடையும் சாலைகள், வெள்ளத்தில் இருந்து சாலைகள் அடித்துச் செல்வதை மீட்க தேவையான முன்னெச்சரிக்கைகள் ஜேசிபி, மணல் மூட்டைகள், லாரிகள், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள், சாலைப் பணியாளா்கள் அனைவரும் களப்பணியாற்ற தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.