முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பெண் பலாத்காரம் : மாதா் சங்கத்தினா் மறியல்
By DIN | Published On : 24th October 2019 06:11 AM | Last Updated : 24th October 2019 06:11 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த கணவரைப் பிரிந்தவரும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிமுக ஆண்டிமடம் முன்னாள் ஒன்றியப் பொருளாளா் செல்வராஜ்(65) அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, அப்பெண்ணின் தாய், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இருப்பினும், இதுவரை அந்த நபா் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், செல்வராஜைக் கைது செய்யக்கோரி ஆண்டிமடத்தில் அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பத்மாவதி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சுகந்தி, துணைச் செயலா் கீதா, அரியலூா் ஒன்றியத் தலைவா் மலா்கொடி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.