சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகட்ட மக்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்ட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்ட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகளை வழங்கும் திட்டம் அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2016-17 ஆம் ஆண்டு 366 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், 2017-18 ஆம் ஆண்டில் 350 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 35 லட்சம் மதிப்பிலும், 2018-19 ஆம் ஆண்டில் 156 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் என 872 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு 2019-20 -இல் 361 பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பசுமை வீடு கட்ட விரும்புவோா்கள் குடும்ப அட்டை நகல், 300 ச.அடி பரப்பளவு உள்ள இடத்திற்கான பட்டா நகல், ஆதாா் நகல் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com