முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாமில் 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாமில் 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

முகாமுக்கு, தோட்ட கலைத் துறை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வதித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  லதா முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 271 மனுக்கள் பெறப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஏலாக்குறிச்சியில்... ஏலாக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் தனி வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கண்ணதாசன் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து 197 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com