சுடச்சுட

  

  சோழன்மாதேவியில் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு புத்தூட்டப் பயிற்சி

  By DIN  |   Published on : 12th September 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சோழமாதேவி கிராமத்திலுள்ள கீரிடு வேளாண் அறிவியல் மையத்தில் தனியார் விதை உ ற்பத்தியாளர் மற்றும் சாகுபடியாளர்களுக்கான விதைச் சான்று நடைமுறை குறித்த புத்தூட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
  பெரம்பலூர் எவர்கரீன் ஹைடெக் சீட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பயிற்சிக்கு பெரம்பலூர் விதைச் சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் தலைமை வகித்து, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் நிர்வாக அமைப்பு, விதைச் சான்றின்  நன்மைகள் மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் குறித்து பேசினார்.
  அரியலூர் விதைச்சான்று அலுவலர் ராமலிங்கம் விதைச் சட்டம், சான்று விதையின் நன்மைகள், சான்று விதையின் நிலைகள், விதைச்சான்று கட்டண விவரம், விதையில் கலப்பு  வருவதை தடுக்கும் முறைகள் பற்றி கூறினார். பயிற்சியில் பெரம்பலூர், விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு  விதை பரிசோதனை  நடைமுறைகள், சான்று விதையின் தன்மைகள், விதைப்பண்ணையில் உழவியல் முறைகள் குறித்து பேசினார். சக்திதாசன் வரவேற்றார். விதைப்பண்ணை விவசாயி பழனிவேல்  நன்றி தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai