சுடச்சுட

  

  ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதியுதவிக்கு விண்ணப்பிக்க செப்.30 வரை கெடு நீட்டிப்பு

  By DIN  |   Published on : 12th September 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்க செப்.30 ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
  இதுகுறஇத்து  மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 30.09.2019-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிறுபான்மையினர் இயக்குநரகம், 044-28520033- என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai